Monday 5 September 2011

kavithai



தமிழ் கவிதைகள், கதைகள் இந்த தளத்தில் உள்ளன, மேலும் கவிதைகள், கதைகள், படங்கள், தயவுசெய்து எங்களுக்குஅனுப்புங்கள்.அவை பெயருடனோ அல்லதுபெயரில்லாமலோ (உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப) வெளியிடப்படும்.நன்றி! அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரி







நட்பு கவிதைகளுக்கு கீழே சொடுக்கவும்
வியாழன், 17 மார்ச், 2011
காய்ச்சல் கொண்ட
வாடிய
உன் முகம்
பார்த்ததும்

காய்ச்சலுக்கு
காய்ச்சல் வர
பிரார்த்தித்து
உனக்கெப்படி
தெரியப்போகிறது ?

என் காதலை
நீ
உணராத வரை ...
நீ
மட்டும்
பூவென்று
நம்பியிருந்தேன் ..

என்
நினைப்பில்
இடி

உன்
தெருவின்
பெயரும்
"பூக்கள் தெரு"வாமே..

நான்
நினைக்கிறன்
நீ
வசிப்பது தவிர ..

வேற என்ன
காரணமிருக்க முடியும்
அப்பெயர்
ஏற்பட்டதற்கு ...


நானும் நீயும்
மரங்களின் நிழல்களில்
முதல் முதல் அருகாமையில்
அமர்ந்திருந்த போது

உன் மௌனங்களை
கலைக்க நான் பட்ட பாடுகளை
இப்போது நினைத்தாலும்
இனிக்குதடி

உன் மௌனங்களை
கலைத்து உன்னை பேசவைக்கும்
போது என் முகத்தை பார்க்க
வெட்க்கப்பட்டு தலை குனிந்தே இருந்தாய்

அன்பே என்னை விட
இந்த மண்தான் உனக்கு
பிடிக்கிறது என்றால் சொல்லிவிடு
நானும் மண்ணோடு மண்ணாகிறேன்
நீ ரசிப்பதற்கு என்றேன்

உன் மௌனங்களை மறந்து
புன்னகையுடன் என் தோளில் சாய்ந்தாய்
உன் சிரிப்பை ரசித்த படியே
பேசதுடங்கினேன் நீயும் உன் மனதை திறந்து
பேச தொடங்கினாய்

அன்பே நீ என்னோடு
இருந்த ஒவ்வொரு நிமிடமும்
என் வாழ்க்கையின் வசந்த காலத்தில்
தான் பறந்து கொண்டிருந்தேன்...............





அன்பே
அதோ அந்த நிலாவை
பார்த்தாயா நான் உனக்காக கட்டிய
தாஜ்மகால் அந்த நிலாவில் தான்
ஒளிந்திருக்கிறது
நம் இருவரும் அமைதியாக
வாழ்வதற்கு
அது ஓர் அழகான உலகம்
அங்கு உனக்கு நான் ................எனக்கு நீ





எண்ணம் மாறியது
உருவம் மாறியது
உடை மாறியது
எல்லாம் உன்னை என் நண்பனாக மாற்றியதால்







அழகான மாலைநேரம்
சூரியனின் ஆணவம்
அடங்கிகொண்டிருந்தது
பள்ளி முடிந்து
நண்பர்களோடு
கும்மாளம் போட்டபடி

ஒரு சிகரெட்டை வாங்கி
பங்கிட்டு புகைத்தபடி
எங்கள் தெருமுனையில்
நுழைந்த நேரம்

என் நண்பனின்
உதடில் புகைந்த செகரெட்டை
பிடுங்கி வீசிவிட்டு
அமைதியாக அவரவர் வீடுநோக்கி
நடக்க ஆரம்பித்தோம்

என்னை சூழ்ந்த நண்பர்களின்
கூட்டம் சிறிது சிறிதாக
குறைய தொடங்கியது ஓகே
அப்புறம் சந்திக்கலாம் டா
என்று சொல்லி பிரிந்து சென்றனர்
நண்பர்கள்

நான் என் வீடு நோக்கி
நடக்கயில் தொலைவில்
என் எதிர் வீட்டு தென்றல்
தன் வீட்டு முற்றத்தை
பெருக்கி கொண்டிருந்தாள்

அவளை தொலைவில் இருந்து
ரசித்த படியே
என் கால்களின் நடை தளர்வடைந்தது
நான் அவளை நெருங்கும் முன்
முற்றம் பெருக்கி நீர் தெளித்து கோலமும் போட
ஆரம்பித்து விட்டால்

தலை நிமிராமல் கோலம் போட்டு கொண்டிருந்தாள்
அவள்மீது பார்வைகளை பதித்த படியே
சற்று ஒருமுறை நிமிந்து பார்க்க மாட்டால என்ற ஏக்கத்தோடு நெருங்கி
என் வீட்டு வாசற்கதவை திறக்கும்
சப்தம் கேட்டு

அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தால்
அவள் போட்ட கோலத்தை விட அழகாய் தெரிந்தது அவள் முகம்
அவள் பார்வைக்கு ஏங்கி கிடந்த எனக்குள் ஏக்கத்தை தீர்த்தது அவள் காந்த பார்வைகள்

என் வீட்டு வாசலில்
தேவதையின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தேன்
அவள் புன்னகையால் காதல் பூக்களை வீசிக்கொண்டு வெட்க்கத்தோடு
வீட்டுக்குள் ஓடிசென்று ஒளிந்துக்கொண்டால்

சிறிது நேரத்துக்கு பின்
என் வீட்டுக்கு செய்தி வந்தது
அவள் பெரியவள் ஆகிவிட்டால் என்று

அன்று பார்வையாலே மலர்ந்த எதிர் வீட்டு
தென்றலின் நினைவுகள் இன்றும்
அடிக்கடி வரும்

ஆனால் இன்று அந்த தென்றல்
வேறு திசை நோக்கி பயணித்து விட்டது
காலத்தின் கோலத்தால்.....................



அழகான மாலைநேரம்
சூரியனின் ஆணவம்
அடங்கிகொண்டிருந்தது
பள்ளி முடிந்து
நண்பர்களோடு
கும்மாளம் போட்டபடி

ஒரு சிகரெட்டை வாங்கி
பங்கிட்டு புகைத்தபடி
எங்கள் தெருமுனையில்
நுழைந்த நேரம்

என் நண்பனின்
உதடில் புகைந்த செகரெட்டை
பிடுங்கி வீசிவிட்டு
அமைதியாக அவரவர் வீடுநோக்கி
நடக்க ஆரம்பித்தோம்

என்னை சூழ்ந்த நண்பர்களின்
கூட்டம் சிறிது சிறிதாக
குறைய தொடங்கியது ஓகே
அப்புறம் சந்திக்கலாம் டா
என்று சொல்லி பிரிந்து சென்றனர்
நண்பர்கள்

நான் என் வீடு நோக்கி
நடக்கயில் தொலைவில்
என் எதிர் வீட்டு தென்றல்
தன் வீட்டு முற்றத்தை
பெருக்கி கொண்டிருந்தாள்

அவளை தொலைவில் இருந்து
ரசித்த படியே
என் கால்களின் நடை தளர்வடைந்தது
நான் அவளை நெருங்கும் முன்
முற்றம் பெருக்கி நீர் தெளித்து கோலமும் போட
ஆரம்பித்து விட்டால்

தலை நிமிராமல் கோலம் போட்டு கொண்டிருந்தாள்
அவள்மீது பார்வைகளை பதித்த படியே
சற்று ஒருமுறை நிமிந்து பார்க்க மாட்டால என்ற ஏக்கத்தோடு நெருங்கி
என் வீட்டு வாசற்கதவை திறக்கும்
சப்தம் கேட்டு

அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தால்
அவள் போட்ட கோலத்தை விட அழகாய் தெரிந்தது அவள் முகம்
அவள் பார்வைக்கு ஏங்கி கிடந்த எனக்குள் ஏக்கத்தை தீர்த்தது அவள் காந்த பார்வைகள்

என் வீட்டு வாசலில்
தேவதையின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தேன்
அவள் புன்னகையால் காதல் பூக்களை வீசிக்கொண்டு வெட்க்கத்தோடு
வீட்டுக்குள் ஓடிசென்று ஒளிந்துக்கொண்டால்

சிறிது நேரத்துக்கு பின்
என் வீட்டுக்கு செய்தி வந்தது
அவள் பெரியவள் ஆகிவிட்டால் என்று

அன்று பார்வையாலே மலர்ந்த எதிர் வீட்டு
தென்றலின் நினைவுகள் இன்றும்
அடிக்கடி வரும்

ஆனால் இன்று அந்த தென்றல்
வேறு திசை நோக்கி பயணித்து விட்டது
காலத்தின் கோலத்தால்.....................






உன் நியாபகமாய்

வைத்துக் கொள்ள

புகைப்படம் வேண்டாம்..,

புன்னகை போதும்!

ஆயிரம் கீறல்களாய் இதயம்

அத்தனையிலும் உன் முகம்!
இடுகையிட்டது GURU MURUGESH நேரம் 5:24 am 0 கருத்துரைகள்
வெள்ளி, 11 மார்ச், 2011
துவைக்கவில்லை....

வெளுத்த ஆடையாய்.

"வெண்"வானம்.....


புத்தனாக இருந்தேன்
என்னை பித்தனாக்கி போனாய்
காதல் பார்வை பார்த்து
சாகும் வரம் தந்தாய்

உன் பார்வை இன்று இல்லை
என் காதல் எந்தன் தொல்லை
மரணம் கொண்டு போன உன் உயிரோடு
மறந்து போனாய் என்னை

உன்னை மறவாமலேயே அழிந்து
போவேன் ..........................நான்


மலரெல்லாம் மனம் இருக்கு
உன் நினைவெல்லாம் சுகம் இருக்கு
பார்ப்பதெல்லாம் நீயாக இருக்க
கனவெல்லாம் சுமை எதற்கு....

என் பேனாவில் மை இருக்கு
என் இதயத்தில் உன் முகம் இருக்கு
எழுதி விடபோரேன் என் ஆயுள் முழுவதும்
உன்னை பற்றியே....



இறைவன் பெயரை சொல்லும்
போலியான முகங்களின் நடுவே தவித்து நிற்கும் அபலை நான்

போலியான முகத்திரைகளை கழிக்க இறைவன் உண்மையாக இருந்தால் வருவானா

அல்லது இறைவனை பற்றி பேசும் போலியான முகங்களின் நடுவே சிக்குண்டு வாழ்க்கை மரணத்தில் போய் முடிவது தான் மனிதனின் விதியா....


என் காதலுக்கு உயிர் கொடுத்த
உன் பார்வைகளும்

என் காதலுக்கு பதில் கொடுத்த
உன் உதடுகளும்

என் காதலை அரவணைத்த
உன் கரங்களும்

என் காதலை சிறை பிடித்த
உன் இதயமும்

என் சோகங்களை மறக்க வைத்த
உன் புன்னகையும்

என்னை வாழ வைத்த
உனது வாக்குறிதிகளும் ,உன் காதலும்
இப்போது எங்கே போனது

உன்னால் மரணப்போர்வைக்குள் நான் மட்டும்

நீயோ மணவறையில் உன் புது கணவனோடு

சரி போகட்டும் விடு அவனிடமாவது உண்மையாய் இரு அவனையும் என்னைப்போல
ஏமாற்றி விடாதே .................................இப்படிக்கு

உன் முன்நாள் காதலன்....


எழுத்துக்கள் மீது
நடராஜ விரல்கள்
நாட்டியமாடுவதும்,

கையடக்க மெளஸை
கை விரல்களால்
சீண்டிச் சிரிப்பதும்,

மாயப் படங்களில்
மயங்கிக் கிடக்க
இணையப் படிகளில்
தவமிருப்பதும்,

என
கணினி வேலை
எளிதென்பது
பலருடைய கணிப்பு.

உண்மையைச் சொல்வதெனில்
வயல் தேர்வு துவங்கி
அறுவடை வரை,
விவசாயமும்
மென்பொருள் தயாரிப்பும்
ஒன்று தான்.

ஒன்று
உழுது செய்வது
இன்னொன்று
எழுதி செய்வது.

ஒன்று தமிழ் பெயர்களால்
தாலாட்டப் படுவது
ஒன்று
ஆங்கிலப் பெயர்களால்
அறியப் படுவது.

வீடு சென்று சேரும்
இரவு பதினோரு மணி சொல்லும்.
கணினி வேலை என்பது
எளிதானதே அல்ல.

கவலையாய்க் கேட்பார்
காத்திருக்கும் அப்பா.
வேலை ரொம்ப கஷ்டமா ?

சிரித்துக் கொண்டே சொல்வேன்
கம்யூட்டர் வேலைல
கஷ்டம் என்னப்பா கஷ்டம்



கடற்கரையில்
பூங்காக்களில்
ஆளில்லாத
பேருந்து நிறுத்தங்களில்

எங்கும் சந்திக்க முடிகிறது
காதலர்களை.

பெரும்பாலும்
வெட்கக் குமிழ்களை
உடைத்துக் கொண்டோ ,

கைரேகை
நீளங்களை
அளந்து கொண்டோ ,

கவித்துவமாய்க்
கொஞ்சிக் கொண்டோ ,

பொய்யாய்
சினந்து கொண்டோ ,
அனைவருமே
ஆனந்தமாய் இருக்கிறார்கள்.

இந்தக் காதல் எல்லாம்
தோற்றுப் போய்விடின்
எத்துணை நன்றாய் இருக்கும் ?

சேர்ந்திருந்தால்
சுகமாய் வாழ்ந்திருப்போம்
என்னும்
நம்பிக்கைகளாவது
மிச்சமிருக்கும்.



எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!!
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
எம் பேரு ஞாபகமிருக்கா
என கேட்டு விடுவானோ ?



அப்பப்போ
போன் பண்ணுடா
எனும் சம்பிரதாய விசாரிப்புக்கு
கண்டிப்பா
என நகர்வான்,
நான் கொடுக்காத நம்பரை
அவன்
எழுதிக் கொள்ளாமலேயே.



பொய்கள் தான்
உண்மையாகவே
நட்பைக் காப்பாற்றுகின்றன.
நேற்று கூட பேச நினைத்தேன்
என
யாரோ பேசிக் கடக்கிறார்கள்
செல்போனில்



அவளா இது ?
மீன் வாங்கிச் செல்லும்
பெண்ணிடம்
கொஞ்சமும் மிச்சமில்லை
கால் நூற்றாண்டுக்கு முன்
கண்களில் சிரித்த வசீகரம்.



நட்பு இருப்பதாய்
சொல்லிக் கொள்ளவேனும்
அடிக்கடி
தேவைப்படுகின்றன
வெள்ளிக்கிழமை பார்கள்.



கிராமத்து மௌன வீட்டின்
கம்பி அளியின் ஊடாக
நண்பனின்
புன்னகை முகம் தெரிகிறது.
இறந்து
வெகு நாட்களான பின்னும்.



ஏழாயிரம் சம்பளம் டா மச்சி
என
குதூகலித்துச் சொல்லும் நண்பனிடம்
சொன்னதில்லை
பல மடங்கு வாங்கும் நான்.
அவனிடம் மிகுந்திருக்கிறது நட்பு.



யாரை ரொம்பப் பிடிக்கும் ?
எதிர்பார்ப்புடன்
மகளைக் கொஞ்சுகையில்,
தோழியின் பெயரைச் சொல்லி
நட்பைப் பெருமைப்படுத்துகிறது
நர்சரி !










அதுவோ கொட்டும்
மழைக்காலம்
அலுவலகம் செல்ல வேண்டி
அவசர அவசரமாய்க்
குளித்து முடித்து துணியைத்
தேடுகிறேன்
தலை துவட்டக் கூட
துணியில்லையடா...
அத்துனையும்
நேற்று பெய்த மழையில்
நனைந்து விட்டதடா
எனகிறாய்….

அலுவலகம் போக வேண்டுமடி
இப்போது என்ன செய்ய..?
என நான் சத்தமிட

சாந்தமாய் என்னருகே வந்து
உன் நீள் கூந்தலால்
என் தலை துவட்டி
உடல் துடைத்து விடும் போது
உன் கூந்தல் ஸ்பரிசத்தில்
என்னை நான் மறந்து விட
உன் கூந்தல் வாசத்தில்
என் கோபமெல்லாம் மறைந்து விட
நம் காதல் அங்கே மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழுகிறது அன்பே..!


ஊன்உறக்கம்
உறைவிடம்
உறவினம்...
என அனைத்தையும்
மறக்கச் செய்து
சதா சர்வ காலமும் உன்னையே
நினைக்கச் செய்யும்
உலகிலேயே மிகவும்
இனிமையான நோய் காதல்..!



ஒரு நாள் என்னிடம்
என்னவள் இதழ் திறந்து...
'பட்டுப் புடவை
வாங்கித் தாயேன்...'
என்றாள்..!
'பட்டுப் போன்ற
மேனி உனக்கிருக்க
பட்டதெற்குப் பெண்ணே'
என்றேன்..!
சட்டென்று
அவள் முகத்தை
வெட்டிக் காட்டி
உன்னிடம் துட்டில்லை
என்பதை மறைக்க
என்னை பட்டென்று
பிட்டொன்றைப் போடுகிறாயா..?
என்று படி வார்த்தையால்
எனை சுட்டுவிட்டுப் போய்விட்டாள்...

காதலிக்கும் போது
என்னுடைய கவித்துவமான
வார்த்தைகள் எல்லாம்
என்னவளுக்கு இனித்தன...
கல்யாணத்திற்குப் பிறகு..?



என்னுடைய இரவும் நீ..! பகலும் நீ..!
என்னுடைய இன்பமும் நீ..! துன்பமும் நீ..!
என்னுடைய நோயும் நீ..! மருந்தும் நீ..!
என்னுடைய கோபமும் நீ..! சாந்தமும் நீ..!
என்னுடைய சக்தியும் நீ..! விரக்தியும் நீ..!
என்னுடைய பலமும் நீ..! பலவீனமும் நீ..!
என்னுடைய வெற்றியும் நீ..! தோல்வியும் நீ..!
இப்படி என்னுள் எல்லாமே நீயானாய்...
நான் உன்(னால்) காதல் தீயானேன்..!



அதிகாலைப் பனியில்
அழகாய்க் குளித்த
ரோஜா மலர் போல
என் முன்னே நீ வந்தாய்...
அந்தியில் வரும் மயக்கம்
எனக்கு அதி காலையில் வந்து விட...
அலுவலக பரபரப்பு
எனை அடித்துத் தள்ள...
உன்னழகை என் கண்ணில்
நிறைத்த படி...
உனைப் பிரிய மனமில்லாமல்
அரை குறை மனதோடு
கிளம்பிச் செல்கிறேன்
அலுவலகத்திற்கு...

தென்றல் வேண்டுமெனில்
உன் மூச்செனக்குப் போதும்..!
திங்கள் வேண்டுமெனில்
உன் சிரிப்பெனக்குப் போதும்..!
நிலவு வேண்டுமெனில்
உன் முகமெனக்குப் போதும்..!
கார்மேகம் வேண்டுமெனில்
உன் கூந்தலெனக்குப் போதும்..!
காந்தம் வேண்டுமெனில்
உன் கண்களெனக்குப் போதும்..!
வசந்தம் வேண்டுமெனில்
உன் வருகை எனக்குப் போதும்..!
வாழ்க்கை வேண்டுமெனில்
உன் காதல் எனக்குப் போதும்..!
இடுகையிட்டது GURU MURUGESH நேரம் 5:07 pm 0 கருத்துரைகள்
யார் வரவிற்காக
இப்படி ஒற்றைக் காலில்
தவம் செய்கிறாய்
பிச்சிப் பூவே..!
எங்கோ ஓரிடத்தில்
பிறந்து, வளர்ந்து,
மலர்ந்து நின்றாலும்
என்னவள் கூந்தலில்
பூச்சூடத்தான்
இந்த ஒற்றைக் கால் தவமோ..?

மல்லிகையின் மற்றொரு நகல்
நீ என்கிறார்கள்..?!
நறுமணத்தின் நனி பிறவி
நீ என்கிறார்கள்..?!
உன் மணத்தால் அரவம்
வருமென்கிறார்கள்..?!
அத்துனையும் உண்மையா?
பிச்சிப் பூவே..!

உன்னைப் போல்
என்னவளும்
ஒரு பிச்சிப் பூதான்..!
உன் உடல் நிறம்தான்
என்னவளுக்கும்...
உன் இதழ் நிறம்தான்
என்னவள் இதயத்திற்கும்...
உன் மெல்லுடல் வடிவம்தான்
என்னவள் உடலிற்கும்...
உன் சிரிப்பினைப் போல்தான்
என்னவளின் புன்னகையும்...

உன்னுடைய எல்லா குணங்களிலும்
ஒன்றாய்ப் போகும் என்னவள்
உன்னிடமிருந்து மணத்தில்
மட்டும் வேறுபட்டிருக்கிறாள்..!
உன் மணத்திற்கு அரவம்
வருமென்கிறார்கள்...
என்னவள் மணத்திற்கு
என் அன்பும் அரவணைப்பும் வரும்..!

(எனை நேசிக்கும் இனிய கவிதை ஒன்று 'பிச்சிப் பூ' என்ற தலைப்பில் கவிதை கேட்டது... அதன் பலனாக இக்கவிதைப் புனைவு..!)
கவிதைகள்க்கான படங்கள்





உன் நினைவின் தாலாட்டுகளோ..?
ஒரு தாயின் தாலாட்டோ
குழந்தையைத் தூங்க வைக்கும்..!
இசையின் தாலாட்டோ
தனிமையைத் தூங்க வைக்கும்..!
உன் நினைவின் தாலாட்டுகளோ
என் தூக்கத்தை கெடுப்பது
மட்டுமின்றி
நொடிப்பொழுதும்
உன்னையே நினைக்க வைக்குதடி..!





நண்பர்களின் வலை தளம்காதல் கவிதை
உயிர் இருக்கும் வரை  உன்னோடு இருக்க வேண்டும்  என்பது என்  ஆசை இல்லை, உன்னோடு இருக்கும்  வரை மட்டும்  உயிர் இருந்தால்  போதும்.
தமிழர் திருநாள் தைப்பொங்கல் திரு நாள் உழுது பாடுபட்ட பாட்டாளி உழு பயன் காணும் நாள் தைப்பொங்கல் திருநாள்...
நிலவும் அழகுதான் அண்ணாந்து பார்த்து ரசிக்குமளவிற்கு. பார்த்தால் பக்கம்தான் நிஜமோ, தொடக்கைகள் நீண்டும் தொட்டுவிடா தொலைவிற்கு. தனிமைய...






No comments:

Post a Comment