Sunday 4 September 2011

நட்பு கவிதை 

வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது "நம் நட்பு'

"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ" 

 


சுயநலமாய் ஒரு நட்பு 

என்றும் எனக்காக நீ இருக்க,
இருந்தும் சுயநலமாய்
கேட்கின்றேன்,
தோள் கொடு தோழா!
நால்வரில் ஒருவனாய்,
என் இறுதி ஊர்வலத்திலும்! 

 

நட்பு கவிதை 

 

நட்பை வாழ்த்தி  

நட்பை நாம் நேசிக்கும்போது...!
"எத்தனையோ கவிதகைள்

என்னால் எழுதப்பட்டிருக்கின்றன...!

நண்பா
,
உனக்கொரு கவிதை நான்

உருவாக்கும்போதுதான் அது

ஒளிவிட்டு பிரகாசிக்கின்றது....!

எத்தனையோ முகங்கள்
,
எவ்வளவோ மொழிகள்
,
எல்லாம் ஒன்றிணைகின்றன

நட்பை நாம் நேசிக்கும்போது...!

எத்தனையோ துன்பங்கள்
,
எவ்வளவோ கஷ்டங்கள்
,
எல்லாம் மறைகின்றன

நட்பை நாம் யாசிக்கும்போது...!

தூய்மையான உள்ளத்தில்

தோன்றுகின்ற நட்பெல்லாம்

துதிக்கப்படுகின்றன...!

என்றும்
,
உன்னதமாய் மதிக்கப்படுகின்றன...!

எங்கேயோ நீயும்....

இங்கே நானும்....

இணைந்தது எப்படியோ..
?
காதலா இல்லை
?
காமமா இல்லை
?
கள்ளமற்ற நட்புதான்...!

இதை கடைசிவரை நான்

காப்பாற்றுவேன் என்று கூறி
,
உனது நட்பை வாழ்த்தி

வணங்குகிறேன்



கல்லூரி திண்ணை 

ஒவ்வொரு இதயத்திலும் மிதந்தன பல கனவுகள்
கண்ணீரில் சில அழகான சிரிப்பில் சில....



கைகள் சேராமல் அந்த இதயங்கள் இணைந்தன

கைகள் கோர்த்து பின்பு ஒன்றாக நடந்தன

அக்கனவுகளை நிஜமாக்க...
,

இதற்கிடையில்


காரணங்கள் இல்லாத சிரிப்பு
,கண்ணீரை கூட
கானல் நீராக்கியது அந்த உறவின் அன்பு!!!!


அத்துணை நிகழ்வுகளும் நினைவுகளாக வந்து போனது
,,,,,,,,,,,,

என் கல்லூரி திண்ணையில் ஒரு நிமிடம் அமர்ந்து

நன்பனே..

கனவுகள் சுமந்து பரந்த பட்டாம்பூச்சி ஒன்று

தன் சிறகுகளை இழந்து மௌனமாய் இன்று மனசுக்குள்

அழுவது என் செவியில் விழுகிறது

உன் இதயத்தின் விசும்பல்கள் என் இதயம் அறியும்..

என் இதயத்தின் தவிப்புகளை உன் இதயம் அறியும்..

என்றாவது என்னை நீ சந்தித்தால் அழுதுவிடாதே..

உன் பிரிவை சுமக்கின்ற என் மெல்லிய

இதயம் உன் கண்ணீரின் கனம் தாங்காமல்

உடைந்துவிடும்....அதை நிமிர்ந்து பார்த்த போது!!!

 

'யார் உண்மையானவர்" 

மறக்க நினைப்பவள்

காதலி.....
,

நினைக்கவும் மறப்பதில்லை


நண்பன்...
,

 

நீ மட்டுமே தோழியாக வேண்டும்......... 

தொடரும் நாட்களெல்லாம்
நீ மட்டுமே தோழியாக

தொடர வேண்டும் என் வாழ்வில்...


பள்ளியாகட்டும்
, கல்லூரியாகட்டும்
பறிகொடுத்த இன்பங்களாகட்டும்

அத்தனையும் பகிர்ந்துகொண்ட

நீயும்
, நானும் இனிவரும் நாட்களிலா
பிரிந்து விடப்போகிறோம்.


தொடரும் நம் நட்பில்

தோற்க்காதிருக்கட்டும் என்றும் அன்பு.


எத்தனையோ நாட்கள்

நம் நட்பில் கரைந்து

நன்றாய் வாழ்ந்த்திருந்தாலும்
,
இன்று உன் குடும்பம்
,
என் குடும்பம் என்று

இருவேறு தீவுகள் ஆகிவிட்டோம்.


இருந்தும் தொலைபேசி வழியாக

இருவரும் தொலைந்துகொண்டுதான் இருக்கிறோம். இன்றுவரை நம் நட்பில்.....


 

 

Nadbu kavithai

 

வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து
,
நீயும் நானும் கடவுளின் படைப்பு
,
என்றும் பிரிய கூடாது "நம் நட்பு
'

"
கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"

"சிரிப்பில் ஒரு பாசம்"

"பாசத்தில் ஒரு நேசம்"

"நேசத்தில் ஒரு இதயம்"

அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ"




அம்மா 

என்னை இந்த உலகுக்கு
அறிமுகபடுத்தியவள் . . .


என் முதல்

தோழியும் கூட . . .


என் செல்ல

குறும்புகளை

செல்லமாய்

திட்டியபடி

ரசிப்பவள் . . .


இந்த உலகத்தில்

ஒருவர் மட்டுமே

உனக்கு துணையென

இறைவன் சொன்னால்

இவள் தான்

என்

இனிய

துணை . . .


அம்மாவின்

அன்புக்கு

இணை

என்றுமே

உலகில் இல்லை . . .



அப்பா 

மலர் என்று சொல்லுவதை விட
‘பூ’ என்று சொல்லும்பொழுது அதன் அருகாமை அதிகமாகிறதா?
அது போலத்தான் தந்தை என்ற சொல்லை விட

அப்பா என்ற சொல்லில் பாசம் அதிகம்.

உன் நினைவோடு… நானிங்கு 

கானல் நீராகா வாழ்க்கையில் சேர்வோம் ஒன்றாகும் நேரம் கனவிலும் வாழ்வோம் கரம் பற்றி நான் அணைப்பேன் காத லினால் நீ நனைப்பாய்



ஜனநாயக அடிமைகள் 

எவனையோ தெரிவு செய்ய எம்மையே தொலைத்த கூட்டமொன்று, மூலை முடுக்கெல்லாம் கொடிகட்ட ஓடியலைகிறது நிர்வாணமாய்

ஒரே பேச்சு - நம் காதல் உயிர் போச்சு 

காற்றின் காலேறி -
நம் காதல் ஊர் சுற்ற தெருவெல்லாம் ஒரே பேச்சு -

நம் காதல் உயிர் போச்சு


 

 

No comments:

Post a Comment