Monday 5 September 2011

aval


பெண் எனப்படுபவள்




மாறித்தான் போகும்
ஒவ்வொருவர்
கை மணமும்
கலந்துள்ள
வியர்வையின் வாசம்
வித்தியாசப்படுவதால்

பெண் எனப்படுபவள்

africa, berbers, morocco, vertical, photograph







தாய்மை
அடைதல் என்பது
உடல் தகுதி
பெண் என்ற பிறப்பே
முதல் தகுதி
மனத்தகுதி
முழுத்தகுதி

பெண் எனப்படுபவள்


காதலை கவிதையாக
காதலை சுவாசமாக
காதலை காமமாக
காதலை குற்றமாக
காதலை வெறும் காரணமாக
காதலை இயல்பான காதலாக
நிர்ணயிக்கிறது
காதலியாகும்
பெண்னின் குணம்

பெண் எனப்படுபவள்



பெண்மையின்
சிவந்த வெட்கம்
மலர்ந்த புன்னகை
நிமிர்ந்த அறிவு
அடர்ந்த அன்பு
உலகை
புதிப்பிப்பதற்கான
இன்னொரு வாய்ப்பு

பெண் எனப்படுபவள்

eyes_11new.jpg eye image by instants
ஆழ்கடல்
மனமென்றும்
அறியமுடியாதென்றும்
காரணங்கள்
சொல்லித்தவிர்க்கும்
கதைகள் பல இங்கே
விருப்பங்களும்
விளக்கங்களும்
வெளிப்படையாய்
விரிந்துகிடக்கும்
எப்போதும்
பெண்களின்
கண்களில்

பெண் எனப்படுபவள்


தனித்தனி
பூக்களாய்
படைத்து படைத்து
சலித்துப்போய்தான்
மொத்தமாய்
படைத்துவிட்டான்
கொத்து கொத்தாய்
பெண்களென்று..

பெண் எனப்படுபவள்

Painting
வெடித்துச்சிதறும்
பிழம்பாக
வெண்ணிலவின்
குளிராக
சிரிப்பாக
சிணுங்களாக
பயமாக
பரிதவிப்பாக
வித வித
ஒலிச்சிதறல்கள்
பிரபஞ்சமெங்கும்
பெண்களால்
காற்றைப்போல
காற்றைவிடவும்
காற்று இல்லாமலும்
ஒவ்வொருவர்
சுவாசத்திலும்
2 பின்னூட்டங்கள் நவம்பர் 20, 2009

பெண் எனப்படுபவள்


இதய பாரம் இறக்கி
இடுப்புபாரம் ஏற்றும்
ஒய்யார ஊர்வலம்
காதல்களும்
கவலைகளும்
கலந்து
கரைந்து போகும்
வற்றாத நீர்வளம்
பட்டது பெரு வலி
என பதைத்த நெஞ்சம்
நடந்த நிகழ்வுகள்
சொல்கையில்
நகைச்சுவையாகிப்போகும்
நாணமில்லாமல்
கண்ணுக்குள் விழுந்த காதல்
கண்டெடுப்பாள் ஒருத்தி
கண்ணீரில் விழுந்த காதால்
கரையச்செய்வாள் ஒருத்தி
கொட்டியது
வெறுங்குடங்கள்
அவரவர்
குடங்கள்
தூக்கியபோது
கை மாறும்
ஆறுதல் குடங்கள்

பெண் எனப்படுபவள்


கண்களில்
கவிழ்ந்திடும்
காந்தத்தில் ஓர் அழகு
கார்குழல்
ஒதுக்கி முடிந்ததில்
ஓர் அழகு
மெல்லிய சிரிப்பொளி
இதழ் கசிந்ததில்
ஓர் அழகு
கொள்ளென கை கொட்டி
சிரிப்பதை விட
ஏதழகு
ஊடலும் கூடலும்
ஓடலும் ஆடலும்
பாடலும்  தேடலும்
ஒருங்கே
ஒளித்துவைத்து
உயர்வினி இல்லையென
உள்ளதெல்லாம் கொட்டிவைத்த
பெண் என்ற படைப்பே
பிரபஞ்சத்தின் பேரழகு

பெண் எனப்படுபவள்

அவனுக்கு
நினைவு குறிப்பேடு
நிகழ்வுகளின் அலாரம்
அவள்..
எழுந்துருங்கள்
நேரமாகிவிட்டது முதல்
உறங்குங்கள்
நேரமாகிவிட்டது வரை
குறிப்பேடின்
அடிக்கோடிட்ட
அடுத்தடுத்த வரியாய்
சொல்ல மாட்டியா..என்பது
முதல் ஞாபகப்படுத்தல்
பதியாத போது
இரண்டவது முறையோ
மூண்றாவது முறையோ
சொல்ல நேர்ந்தால்
அடிக்கொடிட்ட
அந்த வார்த்தை
தவறாது சொல்லப்படுமென
அர்த்தம்
பல நாள் கவனிப்பில்
ஒரு நாள் கேட்டேன்
உனக்கு எதற்காவது
அலாரமாகி இருக்கிறாரா..என்று
அமைதியாய்
அடர்த்தியாய்
ஆழமாய் பார்த்து
வெகு இயல்பாய்
சொல்லிப்போனால்
வெளிக்கிளம்பும்
எல்லா தருணத்திலும்
இடுப்புச்சேலையை
இழு

பெண் எனப்படுபவள்..

Droupathi and Simhika
வந்த பாதை
வலி என்றபோதும்
வாழ்ந்த வாழ்க்கை
துயர் என்ற போதும்
தயங்காமல்
தள்ளுகிறாள் அதில்
தாய் என்ற
ஒரே காரணத்தால்

பெண் எனப்படுபவள்….



எதற்க்கும்
இருக்கட்டும்
என்று
எடுத்துவைத்த
வைராக்கியங்கள்
இழுத்து நிறுத்துகிறது
இயலாமையிலும்
போராளிகளாய்

பெண் எனப்படுபவள்

best Oil Paintings - Acrylic Paintings - Water Color Paintings - Delhi
தலையில்
வைப்பது
நெருப்பென்று
அறியாமல்
புகழ்தலில்
உருகி உருகித்தான்
மெழுகாய்
ஒளி வீசுகிறார்கள்
பெண்கள்

பெண் எனப்படுபவள்..


சண்டை வலுத்த நேரங்களின்
வார்த்தை தெரித்த தடயங்களை
காதுகள் நிறைந்த
வீட்டுச்சுவற்றை
வருடத்திற்க்கொரு முறை
பூசிமறைக்கிறாள்
மறைத்தும் மறைந்திடாத
மனத்தழும்புகளுடன்

பெண் எனப்படுபவள்..


Lady on the Bridge
அடைத்த பாத்திரத்தில்
அடைந்த பாத்திரத்தில்
அதன் வடிவில் சமைந்து
ஓடையாய் நதியாய்
அருவியாய் கடலாய்..
கோபத்தில் வெறுத்து
மேகமாய்  தனித்து
மன நிலை இழக
மழையாய் பொழிந்து..
பேசாமல் வைத்திருக்கலாம்
பெண்ணிற்க்கு
நீர் என்ற பெயரை.

பெண் எனப்படுபவள்

Shringar 2
கண்ணாடி முன்
பெண்கள் எனில்
எழிலை ரசிப்பதாய்
எத்தனையோ பேர்
நினைக்கக்கூடும்
ஆழமாய் ஊடுருவி
தேடுவதெல்லாம்
நேசிக்கப்பட்ட அழகுகளை
மட்டுமல்ல
நிராகரிக்கப்பட்ட
கனவுகளையும் தான்

பெண் எனப்படுபவள்..

Sakuntala
உற்றவர் தோழியர்
பேசித்தீர்த்த ஒரு கணத்தில்
பிள்ளைகள் பள்ளி செல்ல
படவிக்கிடக்கும்
மதியப்பொழுதில்
புணர்தலில் களைத்தவன்
உறங்கிப்போன
பின்னிரவில்
நிகழ்வுகளின்
எச்சமென
வாழ்தலின்
மிச்சமென
தவிர்த்தலின்றி
தனிமைப்பொழுதுகள்
பெண்கள்
வாழ்வில்

பெண் எனப்படுபவள்..

old lady sleeping by jenpet.
மரணப்படுக்கையில்
குடும்பத்தலைவி
இறந்துகொண்டிருக்கிறது
வீடு..

பெண் எனப்படுபவள்

image
பேரிரைச்சல்
கொண்ட உலகையும்
பெருமெளனம்
கொண்ட வாழ்வையும்
ஒற்றைசங்கீதமாய்
இனைக்கிறது
எவ்வடிவிலாவது வரும்
ஓர் பெண் உறவு
.

No comments:

Post a Comment